சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக திரு பாஸ்கர் பதவி ஏற்றதிலிருந்து ஒரே பிரச்சனையாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது.

பத்து, பதினைந்து வருடமாக அலுவலக பணியாளராக வேலை செய்துகொண்டிருந்தவர்களை நிரந்தரம் செய்யாமல். திடீரென்று கிட்டத்தட்ட 60 பேரை வேலையிலிருந்து நீக்கி விட்டார் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கவில்லை.அதில் சிலபேர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள்.அதில் இரண்டு பேர் பாஜக கட்சியின் டெல்லிக்காரர்களை பிடித்து திருப்பி வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள்.அவர்களை மட்டும் துணைவேந்தர் பாஸ்கர் வேலையில் சேர அனுமதியளித்து இருக்கிறார். நீண்ட காலம் பல்கலையில் பணிசெய்தவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது.

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு பாஸ்கர் மனிதாபிமானமற்ற முறையில் இன்னொரு செயலையும் செய்து .இருக்கிறார். அதுதான் நீக்கப்பட்ட 60 பேர்களின் வேலைக்கும் புதிதாக ஆள் எடுப்பதற்கு விளம்பரம் கொடுத்து இருக்கிறார்.இன்னும் ஐந்து மாதத்தில் பல்கலைக்கழகத்தை விட்டு போக இருக்கும் சூழலில் இவர் இப்படி புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பது மரபல்ல ஆனால் இவருக்கு எல்லாம் காசுதான் என்று சொல்லிக்கொள்கிறார்கள்

இந்த நிலையில் இன்று ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top