எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது.

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்ததையும் அதற்காகத்தான் இந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்சே டெல்லி வந்தார். என்றும் நிருபர்களுக்கு சொல்லப்பட்டது.உண்மையில் எதற்காக வந்தார் என்பது பின்னால்தான் தெரியும்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக்சே இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் மேலும் சில தலைவர்களை ராஜபக்சே சந்தித்து பேசுவார் என தெரியவந்துள்ளது.

விராத் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பு வெறும் பெயருக்குத்தான் சுப்பிரமணிசாமி வைத்திருக்கிறார். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே யாருக்கும் தெரியாது. ஏழு பேர் விடுதலையை நிறுத்துவதற்கு, மோடிக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்கும் ராஜபக்சேவை வரவைத்து சந்திக்கவும் வைத்துவிட்டார்.அவர் ஒரு அரசியல் ஏஜென்ட் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார் என்று சமூக ஆர்வலர்களும் மனித உரிமை போரளிகளும் சொல்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top