காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்

ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.வைத், தற்போது போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தக்க ஏற்பாடுகள் செய்யும்வரை, காவல்துறை தலைவர் பதவிக்கு 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான தில்பக் சிங் பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top