வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்குவங்க மாநிலம் திஹா பகுதியில் நேற்று கரையை கடந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்துக்கு வடமேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

வட தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல நகரங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதனால் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில தினங்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top