WTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக, நெல் அதிகம் உற்பத்தியாகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் வாங்குவதற்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும், மாநில அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும் என நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, நெல் கொள் முதல் நிலையங்களில் குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,750 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த உயர்த்தப்பட்ட விலை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், பழைய விலையான ரூ.1,550 என்ற விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடி நெல் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய விவசாயிகள் தீர்மானித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து அரிசியாக தந்துவிட்டு, நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி முதல் 59 நெல் கொள்முதல் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 49 நெல் கொள்முதல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.

எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மத்திய அரசிடம் பணம் இல்லாததால். 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. என்று செய்தி வருகிறது இதே மத்தியஅரசு தான் முன்பை விட 60% அதிகமாக வட்டி செலுத்தியுள்ளனர் என்று இரண்டு நாள் முன்பு கூறியது.

ரேசன்கடை மூடல், நெல்கொள்முதல் நிலையங்கள் மூடல் என்று ஒவ்வொன்றாக மத்தியஅரசு WTO கையெழுத்திட்டதின் படி செயல்படுத்தி வருகிறது. தமிழகஅரசு தன் சொந்த செலவில் நெல்கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு தான் விற்க வேண்டியது வரும். பிறகு தனியார் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யும், ஒரு கட்டத்தில் தனியார் நிறுவனங்களே விவசாயிடமிருந்து நிலங்களை புடுங்கி விவசாயமும் செய்யும்.GMO விதைகள் அனைத்தும் இலகுவாக விதைக்கப்படும். தற்சார்பு பொருளாதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அபல நிலை தான் உருவாகும்.

ஏற்கனவே WTO-ல் உலக வர்த்தக கழகத்தில் மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக நிர்மலா சீத்தாராமன் சென்று இந்தியாவிற்காக கையெழுத்து இட்டிருப்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி தெரிவித்து இருந்தார். அதை மறுத்து மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் ட்விட்டர் போட்டு இருந்தார்.அதற்கு மே பதினேழு இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டதும் அமைச்சர் அமைதியாகிவிட்டார்

இந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.தமிழக அரசு எவ்வளவு நாட்கள் இதை தொடர்ந்து செய்வார்கள் என்பது கேள்விக்குறியே!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top