பாஜக அரசு தேசிய பேரிடராக அறிவிக்காததால் மக்களிடம் நிதி கேட்கும் கேரளா முதல்வர்!

கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை – நிதி உதவி செய்வது எப்படி?

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை மீட்க https://donation.cmdrf.kerala.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை வழங்கலாம்.என்று கேரளா அரசு கேட்டுக்கொண்டுள்ளது

கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கிறது. 18000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சேதம் நிகழ்ந்து இருக்கிறது அனால் மத்திய அரசு வெறும் ஐநூறு கோடி மட்டும் வழங்க இருக்கிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவ முன்வருவோர் நிவாரண நிதி அனுப்ப கீழுள்ள link ஐ கிளிக் செய்யவும்.

https://donation.cmdrf.kerala.gov.in/

அல்லது கீழ்கண்ட வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி,
வங்கி கணக்கு எண் : 67319948232
வங்கி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஐ.எப்.எஸ்.சி : SBIN0070028
கணக்கு வகை : சேமிப்பு
PAN : AAAGD0584M
SWIFT CODE : SBININBBT08.

இதேபோல் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் மற்றும் கண்ணூர், இடுக்கி, வயநாடு கலெக்டர் அலுவலகங்களில் நிதி சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. அங்கும் நேரடியாக சென்று நிதியுதவி வழங்கலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top