கேரளாவில் வெள்ளப் பாதிப்பு; எட்டாயிரம் கோடிக்கு மோடி வெறும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.

கேரளா பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நூறு வருடங்களில் இல்லாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு உதவ பல்வேறு தரப்பிலிருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தியப் பிரதமர் கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார்.

இதனையடுத்து கேரள மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால வெள்ள நிவாரண உதவியாக ரூ.500 கோடியை அறிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணத்துக்காக ரூ.8,316 கோடியை கேரள அரசு கேட்டிருந்தது. முன்னதாக மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.100 கோடியை ஒதுக்கிய நிலையில் தற்போது ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மொத்த இழப்பு பதினெட்டாயிரம் கோடியை தாண்டும் என்ற நிலையில் கேர அரசு கேட்டது வெறும் ரூ.8,316 கோடிதான். ஆனால், மத்திய அரசு மோடி சொல்லி ரூ. 500 கோடியை ஒதுக்குகிறது. கேரளா மக்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.மோடி சுற்றுபயண செலவு பல ஆயிரம் கோடியை தாண்டும் நிலையில் கேரளாவிற்கு வெறும் 500 கோடியை தந்து கண்துடைப்பு நாடகத்தை நடத்துகிறது மோடி அரசு.மலையாளிகள் நாங்கள் மறக்க மாட்டோம் என்கிறார்கள் மக்கள்

இதுதவிர, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் 14 ராணுவக் குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. அதுதவிர, கடற்படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்களும், கடலோரக் காவல் படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top