டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் JNU மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதில் அவர் உயிர் தப்பினார்.

வெறுப்புணர்ச்சிக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் சார்பில், ’பயமில்லாமல் விடுதலையை நோக்கி’ எனும் தலைப்பில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே உமர் காலித் அங்கு சென்றிருந்தார்.

டெல்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப்புக்கு வெளியில் அவர் மீது ஒருவர் கைத்துப்பாக்கி மூலம் சுட முயன்றுள்ளார். அந்த நபர் மேலிருந்தபடி சுட்டதால் கைப்பிடியிலிருந்து துப்பாக்கி நழுவி விழுந்துவிட்டது;  சுட்டவர்  தப்பியோடிவிட்டான்.

’கான்ஸ்டிட்யூஷன் கிளப் கட்டடத்துக்கு வெளியே ஒரு கடையில் தேநீர் குடிப்பதற்காக நண்பர்களுடன் அவர் நின்றிருந்தார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இடம் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற அலுவலகம் அருகில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top