திருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.

வேலூர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது   புதிதாக  மூன்று  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு.

தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகளை பதிவு செய்து வேலூர் சிறைக்குள்ளேயே மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.

அதில் இரண்டு வழக்குகள் 2017ல் குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த போது, புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்துப் பேசியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கிலும் பிரிவு 124-A தேசத்துரோக வழக்கினை பதிவு செய்திருக்கிறார்கள்.  குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top