கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள்

கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவலாம் என்று அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை காணலாம்.

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 போ் உயிாிழந்துள்ளனா். 6 பேரை காணவில்லை என்று மாநில அரசு சாா்பில் அறிவிபக்கப்பட்டுள்ளது. சுமாா் 60 ஆயிரம் போ் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இருப்பினும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அனைவரிடத்திலும் அரசு சாா்பில் பொதுவான உதவி கோரப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சரின் நேரிடி நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்க,

 

டிடி/செக் மூலமாக பணம் வழங்க விரும்புபவா்கள்
The Principal Secretary (Finance) Treasurer,
Chief Minister’s Distress Fund, (முதல்வா் நிவாரண நிதி)
Secretariat, Thiruvananthapuram-1. (தலைமை செயலகம், திருவனந்தபுரம்) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இணையதளம் வாயிலாக நிதியுதவி செய்ய விரும்புபவா்கள்
கணக்கு எண்: 67319948232
வங்கி: State Bank of India (பாரத ஸ்டேட் வங்கி)
கிளை: City Branch, Thiruvananthapuram
IFSC Code: SBIN0070028
PAN: AAAGD0584M
பெயா்: CMDRF

என்ற கணக்கில் பணம் செலுத்தலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் மட்டுமல்லாது பொருளாகவும் உதவி செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top