தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இந்த கைது அடிப்படை மனித உரிமை மீறல் என தமிழகம் மட்டுமில்லாமல் உலகின் பல பகுதியில் உள்ள சமுக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.