திருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை

ஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட காவலர்கள் தூக்கிக்கொண்டுபோய் 2017இல் பெரியார் சிலைக்கு மாலை போட்டாரென்று புதிய வழக்கை போட்டு அதனடிப்படையில் இரவோடு இரவாக நேற்று புழல் சிறையில் கொண்டுச்செல்லப்பட்டார்.

இன்று காலையில் தோழரை பார்க்க புழல் சிறைக்கு சென்ற வழக்கறிஞர்களிடம் திருமுருகனை வேலூர் சிறைக்கு மாற்றிவிட்டோமென்று சொல்லியிருக்கிறார்கள். இது குறித்து எங்களின் வழக்கறிஞருக்கோ அல்லது இரத்த உறவுகளுக்கோ கூட எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது தோழர் திருமுருகன் வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறைபடுத்தப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top