‘கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது’ – டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசு அதனை மறுத்து கிண்டியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.

அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

டிராபிக் ராமசாமி ஆர்.எஸ்.எஸ் சின் வழிகாட்டுதலில் கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டு முறையிட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் சின் பொறுப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி இதை கருத்தை வலியுறுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.அதை தொடர்ந்து பாஜக வை சேர்ந்த பேச்சாளர் இராகவனும் முகநூலில் கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்ககூடாது என்று எழுதியிருந்தார். டிராபிக் ராமசாமியோ சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மனு போட்டிருக்கிறார்

ஆனால், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், கருணாநிதியின் இறுதி சடங்குக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top