மணல் சிற்பத்தில் கலைஞர் உருவம்; சிற்பி சுதர்சன் பட்நாயக் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தின் பேராளுமையும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

அதில், 1924-2018ஆம் ஆண்டை குறிப்பிட்டு வரலாற்று நாயகன் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகத்துடன் அவர் வரைந்துள்ள மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top