மெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும் பாஜக வின் சொல்கேட்டு அதிமுக அரசு இன்னும் மௌனம் காக்கிறது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி 95 வயதில் காலமானார். அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும்,தமிழக அரசு சரியான பதிலை தராமல் இழுத்தடித்து சற்று முன்பு. அண்ணா சமாதிக்கு பின்புறம் அவர் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுத்துள்ளது. மாறாக கிண்டி காந்தி சமாதி அருகே இடம் தருவதாக சொல்லியிருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உயர்நீதிமன்றத்தில் மெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு ஒன்று நிலுவையில் இருப்பதால் தங்களுக்கு மெரினாவில் இடம் தர சட்டச் சிக்கல் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் இன்று காலை உயர்நீதி மன்றத்தில் உள்ள அந்த மனு மனுதாரர் வி.காந்திமதி அவர்களால் திருப்பி வாங்கப்பட்டு அந்த வழக்கை இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகிய இருவரும் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

தற்போதே திமுக தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனை முன்பு கூடி வருகிறார்கள். தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து கண்டன குரல் எழுப்புகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top