திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 6,10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் காலமானார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. . நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டது . சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது அதில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் இன்று மாலை 6,10 மணியளவில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top