தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி எல்ஐசி நிதி உதவி

நடப்பு நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசி நிதி உதவி செய்யவிருக்கிறது. இந்த நிதி உதவி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிடும் பத்திரங்களின்மூலம் செய்யப்படும். இவ்வாறு வெளியிடப்பட்ட, 30 ஆண்டுகள் கழித்து முதிர்வுறும் பத்திரங்களில் எல்ஐசி ஏற்கெனவே ரூ.4,200 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டிற்கு முதல் 10 ஆண்டுகளுக்கு 8.45 சதவீத வட்டி வழங்கப் படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு பத்தாண்டுக்கும், அன்றைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து வட்டி
நிர்ணயம் செய்யப்படும். பொதுவாக, இவ்வளவு நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய மற்ற நிறு வனங்கள் தயாராக இருப்பதில்லை என்பதால், இவ்வாறான முன்னேற்றப் பணிகளுக்கான உதவியை எல்ஐசியும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமும் மட்டும்தான் செய்கின்றன. நடப்பு நிதியாண்டில் ரயில்வே நிதிக் கழகத்திற்கும் எல்ஐசி ரூ.26 ஆயிரம் கோடி நிதி உதவி செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top