வரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களை தவிர, வெளிமாநில மக்கள் யாரும் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இது காஸ்மீர் பற்றி அடிப்படை விவரம் தெரியாதவர்கள் போடும் மனு என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு காஸ்மீர் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த ஒரு நாடு அதை மெல்ல மெல்ல இந்திய தனக்கு உரித்தான ஒரு மாநிலமாக மாற்றிவிட்டது.வரலாறு தெரியாமல் பாஜக விரிந்த பாரதமாக இந்தியாவை பார்க்கிற முயற்சியில் காஸ்மீரை இந்தியாவோடு சேர்த்து அதை ஒரு மாநில அந்தஸ்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. காஸ்மீர் ஒரு தனியான நாடு என்பதற்கு தற்போதைக்கு இருக்கும் ஒரே அடையாளம் சிறப்பு அந்தஸ்துதான். அதை நீக்குவதற்குதான் பாஜக முயற்சி பண்ணுகிறது

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காஸ்மீரின் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, இந்த சட்டப்பிரிவுக்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு முகாமிலிருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரையும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பல்தால் மற்றும் பஹல்காம் முகாம்களிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top