தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டி; திருநெல்வேலி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தோனி

சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டிக்கு தோனி திடீரென மைதானத்துக்கு வந்து ரசிகர்களை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்தார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு தோனி வருகை தருவது வழக்கமாயினும் சென்னைக்கு வெளியே, அதுவும் திருநெல்வேலிக்கு அவர் இப்போதுதான் முதல் முறையாக வருகை தந்துள்ளார்.

இது சிறப்பான இடம் என்று கூறிய தோனி, “இங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டது, நான் அவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருக்கிறேன். எனவே நிறுவனத்தின் முதல் ஆலையைப் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரியதாக அமைந்தது.
அணித்தேர்வு குறித்து ஏகப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் இருந்தன. 30 வயதுக்கு மேல் உள்ள வயதான அணி என்றனர்.

வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் நான் அவ்வாறு உணரவேயில்லை. அனைத்துமே எங்களுக்குச் சவால்தான் ஆனால் வீரர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மொத்தமாக மிக அருமையான கம்-பேக் அது, இதைவிட சிறப்பாக அமைய முடியாது.

இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களை வாழ்த்த வந்தேன். இப்பகுதிகளில் சிஎஸ்கேவுக்கு உயிரைக்கொடுக்கும் ரசிகர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி நவிலல் சரியாக இருக்கும். நாங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து வெளியே இருக்கும் போது கூட ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்” இவ்வாறு கூறினார் தோனி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top