கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர். அவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர், அவரது உடல்நலம் குறித்து விளக்கி கூறுகின்றனர். இதேபோல டாக்டர்களும் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

அந்தவகையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்துள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து காவேரி ஆஸ்பத்திரி வரையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால், முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top