இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி காஸ்மீர் இன மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

காஸ்மீர் விடுதலைக் கோரி போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகளை காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் கிலூரா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், சி.ஆர்.பி.எஃப் மற்றும் காஷ்மீர் போலீஸ் விசேட அதிரடிப் பிரிவு (எஸ்.ஜி.ஜி) , மத்திய ஆயுதப்படை போலீஸ் அடங்கிய சிறப்பு அதிரடிப்படையும் இணைந்துகொண்டது. பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் போராளிகள் மீது தானியங்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு போராளிகளும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இருட்டத் தொடங்கியதும் அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிவிடாதபடி அந்த பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலையில் வெளிச்சம் வரத்தொடங்கியதும் மீண்டும் பாதுகாப்பு படையினர் சாதாரண மக்களையும் ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாக நிற்கும் போராளிகளையும் முழு சக்தியையும் பயன்படுத்தி ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஜே.கே. பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவு (எஸ்.ஜி.ஜி) ஆகியோர் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியானார்கள். அதன்பின்னரும் சண்டை தொடர்ந்ததாக இறுதியாக வந்த தகவல் தெரிவித்தது.

இந்திய ராணுவத்தின் இந்த அத்துமீறலை கண்டித்து அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரும் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி சுடுதல் ஆகிய நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் ஸ்ரீநகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இதில் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் 52 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 9 பேர் புல்லட் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைகளுக்கு சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டன.

இறந்த வாலிபர் பிலால் அகமதுகான் என்பது பின்னர் தெரியவந்தது.

முன்னதாக இந்த செய்தி பரவுவதை தடுக்க வெள்ளிக்கிழமை பாஜக அரசு இரவில் இருந்து அந்த பகுதி முழுவதும் செல்போன், இணையதள வசதி துண்டிக்க ஆணையிட்டிருந்தது.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் article 35a விற்கு ஆதரவாகவும், இந்த சட்டம் என்னும் உரிமையை விட்டு தர மாட்டோம் என்னும் முழக்கத்துடனும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top