அமெரிக்கா சதி; ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் பரவுகிறது

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார்.

அவர் கூறுகையில், “நீங்கள்(டிரம்ப்) சிங்கத்தின் வாலை(ஈரான்) பிடித்து விளையாட வேண்டாம். இதற்காக பிறகு நீங்கள் மிகவும் வருத்தப்படவேண்டி இருக்கும். ஈரான் சமாதானத்தின் தாய். எனவே எங்களுடன் சமாதானமாக செல்லுங்கள். மாறாக ஈரானுடன் போரிட்டால் ஈரான் போர்களின் தாய் என்பதை உங்களுக்கு உணர வைக்கும்” என்று எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா ஈரானுடன் பேச்சு வார்த்தையில் நம்பிக்கை வைப்பதாகவும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியது.ஆனால் திரைமறைவில் ஈரானை பிரச்சனைக்குள்ளாக்க எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது அமெரிக்கா ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்க சதி வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.எகிப்தில் ஏற்படுத்தியது போல ஈரானிலும் உள்நாட்டு புரட்சியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது.தற்போது ஈரான் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அந்த நாட்டின் 10 நகரங்களில் அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரா னுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் தொடங்கியது. தற்போது 10 நகரங்களில் இந்தப் போராட்டம் பரவியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. டெஹ்ரான் தவிர அஹ்வாஸ், ஹமேதான், இஷாபான், கராஜ், கெர்மான்ஷா, மஷாத், ஷிராஸ், உர்மியா, வராமின் ஆகிய நகரங்களில் நேற்று மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம், கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

ஈரானில் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அவர்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அரசைக் கண்டித்து சாலையில் சென்ற வாகனங்களுக்கும் சிலர் தீ வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ஈரான் நாட்டு ராணு வம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைந்துப் போகச் செய்தனர்.

மேலும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்ய வரும் போலீஸார், ராணுவத்தினர் மீது கல் வீசி போராட்டக்காரர்கள் தாக்கினர்.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம் நேற்று தீவிரமடைந்தது இதையடுத்து 10 நகரங்களி லும் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top