காஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்!

தேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அப்பாவி மக்களை சுடுவதும்,காஸ்மீர் விடுதலைக்காக போராடுபவர்களை தீவிரவாதி என்று சொல்லி சுட்டுக்கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது

நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு வந்ததாகவும்.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப்பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா கிராமத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எல்லா பத்திரிக்கையும் அப்பாவி மக்களையும்,விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்றும் எழுதுகிறார்கள்.என்று காஸ்மீர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்

மேலும், காஸ்மீர் குப்வாரா மாவட்டத்தின் [Khumriya]l கும்ரியால் பகுதியில் இந்திய ராணுவம் இன்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியது.

இந்திய ராணுவத்தின் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காஷ்மீர் விடுதலைப் போராளிகள் பிலால் அகமது ஷா மற்றும் ஜாகூர் அகமது என்னும் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் இணைய சேவை தடை செய்யப்பட்டது.

போராளி பிலால் அகமது ஷா வின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்துகொண்டு இந்தியராணுவம் செய்யும் தொடர் திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராகவும், காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொது மக்களின் மீதும் இந்திய ராணுவம் தனது அயோக்கியத்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 55 வயதான முகமத் ஜமால் தந்த்ராய் க்கு இடது கையிலும் வயிற்றிலும் என இரண்டு குண்டுகள் பாய்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் நாளை இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமையான article 35A மற்றும் 370 சட்டங்கள் நீர்த்து போவதற்கான பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஆலோசனையையும் அல்லது சட்டத்தையே நீக்கும் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை கண்டித்து, இன்று ஸ்ரீநகரில் வணிக அமைப்புகள் மற்றும் Jammu and Kashmir Liberation Front அமைப்புகளும் காஸ்மீர் விடுதலை போராளி யாசின் மாலிக் தலைமையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top