வெங்கையா நாயுடு பாரபட்சமாக செயல்படுகிறார்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டி, எதிர்கட்சிகள் அவருக்கு கடிதம் அனுப்பப் போவதாக கூறப்படுகிறது.

மக்களவையின் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு இந்த முறை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, 8 எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து, பாரபட்ச நடவடிக்கை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருந்தனர். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தை சுமித்ரா மகாஜன் கையாண்ட விவகாரம் குறித்து அந்த கடிதம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், அதைப் போன்ற ஒரு நடவடிக்கையை வெங்கையா நாயுடுவுக்கு எதிராகவும் எடுக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வெங்கையா நாயுடுவுக்கு எதிராக கடிதம் எழுத ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பல எதிர்கட்சிகள் இந்தப் பட்டியலில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ‘பாரபட்சமான நடவடிக்கையில் மாநிலங்களவை சபாநாயகர் ஈடுபடுவதை சுட்டிக் காட்ட என்ன செய்யலாம் என்று விவாதித்து வருகிறோம். அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். தற்போதைக்கு, கடிதம் எழுதப் போகிறோம்’ என்று கூறியுள்ளார்.

ராஜ்யசபா டிவியில் ஆளுங்கட்சி தரப்பு வாதங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது என்றும், எதிர்கட்சித் தலைவர்களின் பேச்சுகள் ஒளிபரப்பப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. அதேபோன்று ராஜ்யசபா இணையதளத்திலும், எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு அரசு சொல்லும் பதில்கள் நீக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top