சிலைக் கடத்தல் விசாரணையை திசை திருப்ப வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு –

பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் விசாரணை குழு.உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறப்பாக விசாரணை செய்து சிலை கடத்தல் மற்றும் சிலை கடத்தலுக்கு துனை நின்றவர்கள் என அனைவரையும் கைது செய்து இருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் விசாரணை குழுவின் முழு அறிக்கையையும் குழு கண்டுபிடித்த எல்லாவற்றையும் கேட்டது .

அதற்கு பொன்.மாணிக்கவேல் குழு மறுப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டது. பொன்.மாணிக்கவேல் குழு மீது கோபம் கொண்ட தமிழக அரசு அவரோடு வேலைபார்த்த போலீஸ் காரர்களையும் அலுவலர்களையும் மாற்றியது.இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில் தமிழக அரசு பொன்.மாணிக்கவேல் குழுவை பழிவாங்கும் நோக்கில் இப்போது உயர்நீதி மன்றத்தின் கட்டளையையும் மீறி சிலை கடத்தல் வழக்கை சிபிஐ இடம் ஒப்படைத்து இருக்கிறது.

பொன்.மாணிக்கவேல் குழுவின் எந்த அறிக்கையையும்,ஆவணத்தையும் பார்க்காமல் விசாரணையில் திருப்தி இல்லாததால் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று இன்று உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது

சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி பல்வேறு சிலைகளை மீட்டுள்ளது. ஆனால் மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு இருந்து வருகிறது. அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பொன்.மாணிக்கவேல் குழுவினரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், ஓராண்டாக ஒரு விசாரணை அறிக்கையை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top