அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்துக்கள் பெயரை மட்டும் சேர்க்கும் பாஜக; அசாம் கண பரிஷத் எதிர்ப்பு

அசாம் மாநில அரசு தயாரித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் எதிர்ப்பு தெரிவித்தது

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இந்த நிலையில், பாஜக அரசு வங்கத்திலிருந்து வந்த இந்துக்களை மட்டும் சேர்த்துக்கொள்ளவும் இஸ்லாமியர்களை விட்டுவிடவும் ஒரு மறைமுக வேலையாக இதை செய்து வருகிறது. அஸ்ஸாமில் இந்துக்களின் ஓட்டை அதிகப்படுத்த இப்படி குறுக்கு வழியில் பாஜக அரசு செயல்படுகிறது என்று அதன் கூட்டணி கட்சியினரே புகார் சொல்கிறார்கள்.

இன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியலில். அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கதேசத்தவர்களா அல்லது இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்ற விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:- “ தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஒரு சில பேர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top