42 மணிநேரத்தில் கடக்கவேண்டிய தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்ட சரக்கு ரெயில்!

உர மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரெயில் 1,326 கி.மீட்டர் தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்டது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் பஸ்தி நகரில் இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் என்ற பெயரில் உர நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு கடந்த 2014ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து உர மூட்டைகளை எடுத்து செல்ல சரக்கு ரெயில் ஒன்றில் முன்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, டை அம்மோனியம் பாஸ்பேட் என்ற ரசாயன உரம் அடங்கிய 1,316 உர மூட்டைகளை சுமந்து கொண்டு 2014ம் ஆண்டு நவம்பர் 10ல் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.

அந்த சரக்கு ரெயில் நிர்ணயிக்கப்பட்ட 1,326 கிலோ மீட்டர் என்ற தொலைவை 42 மணிநேரம் மற்றும் 13 நிமிடங்களில் வந்தடைய வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக கடந்த புதன்கிழமை மதியம் 3.30 மணிக்கு வந்தடைந்தது. இதற்கு ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதுபற்றி வடகிழக்கு ரெயில்வே மண்டல தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் கூறும்பொழுது, சில வேகன்கள் அல்லது பெட்டிகள் சுமைகளை எடுத்து செல்ல முடியாதபொழுது, அது யார்டுக்கு அனுப்பப்படும். இந்த சம்பவத்திலும் இதுபோன்றே நடந்திருக்க வேண்டும் என தெரிகிறது என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top