டோக்லாம் பிரச்சினையை ஏன் பிரிக்ஸ் மாநாட்டில் எழுப்பவில்லை?- மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் பிரச்சினை தொடர்பாக பேசாமல் அமைதி காத்தது ஏன் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இப்பிரச்சினையை அத்தகைய நேரத்தில் எழுப்பாமல் இருந்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சர்ஜேவாலா தெரிவித்ததாவது:

”அமெரிக்க அரசின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் டோக்லாம் பிரச்சினை பேசப்பட்டுள்ளது. அதில் இந்தியா அதை முறியடிக்க முயன்றது என்று கூறப்பட்டது.

இருப்பினும் இந்தக் கூற்று இந்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது. சீனா தனது நடவடிக்கைகளை டோக்லாம் பிரதேசத்தில் மீண்டும் தொடங்கியது, ஆனால் பூட்டான் அல்லது இந்தியா அதை முறியடிக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இக்கூற்றுக்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்லாமில் சீனா மீண்டும் ஊடுருவியுள்ளது தேசிய பாதுகாப்புக்கு நேரடி சவாலாகவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு டோக்லாமில், சீனா தனது ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை நிறுத்திவைத்துள்ள நிலையில், நமது பிரதமர் அதுகுறித்து மவுனம் சாதித்து வருகிறார்.

முன்தீர்மானங்கள் எதுவுமற்ற நிலையில் செல்லும் அவர் சீனப் பயணத்தின்போது அவர் டோக்லாம் பிரச்சினை குறித்து பேச மறந்துவிடுகிறார். இதில் இன்னொரு பிரச்சினை என்னவெனில் இந்தியாவை நம்புவதைத் தவிர டோக்லாம் பிரச்சினை குறித்து சீனா பூட்டானிடம் பேசுகிறது. இதற்கும் பிரதமர் மவுனம் சாதிப்பதுதான் தொடர்கிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் (சுஷ்மா ஸ்வராஜ்) சீனாவுக்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்கள் டோக்லாமின் பிரச்சினையை எடுத்துக்கொள்வதில்லை.

ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் பிரச்சினை தொடர்பாக பேசாமல் அமைதிகாத்தது ஏன்? இது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்த அரசாங்கம் தனது 56 இன்ச் மார்பையோ அல்லது தனது சிவப்புப் பார்வையையோ எப்போது காண்பிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளில் எழும் தேசியப் பாதுகாப்பு குறித்து தைரியத்தோடு செயல்படும் அக்கறை உள்ளதா என்பதை மட்டும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.’

இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top