அசாம் : சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி – பாஜக எம்பி மகள் உட்பட 19 பேர் கைது

அசாம் மாநிலத்தில் சிவில்சர்வீஸ் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட பாஜக எம்பி மகள், பாஜகவின் எல்ஏல்ஏ மருமகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெமினி கோகாய் புகான் மகன் மற்றும் மகள் உள்ளிட்ட 19 அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடி விவகாரம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் 2016ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அசாம் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் விடைத்தாள்களில் உள்ள கையெழுத்திற்கும், தேர்வு எழுதியவர்களின் கையெழுத்தும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு தடயவில்சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் தேர்வில் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த மோசடியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்பி, மற்றம் எம்எல்ஏகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய விஐபிகளின் நெருங்கிய உறவினர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன்படி அசாம் மாநில பாஜக ஆர்.பி.சர்மாவின் மகள் பல்லவி சர்மா, பாஜக எம்எல்ஏ ஜோய்ராம் எங்லிங் மருமகள் மருமகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜமினி கோகி புகான் மகள் மற்றும் மகன் ஆகியோரின் விடைத்தாள்களும் மாற்றப்பட்டு விடை திருத்தம் செய்யப்பட்ட விடைத்தாள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை தடயவியல் சோதனையிலும் இந்த மோசடி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மோசடியில் அசாம் சிவில் சர்வீஸ் பணியில் இருக்கும் 13 அதிகாரிகள் மற்றும் அசாம் போலீஸ் சர்விஸ் பணியில் இருக்கும் 3 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதே போல் இந்த முறைகேட்டில் தொடர்புடைய அசாம் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 50க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top