‘சமூகத்திற்கும் தனி நபர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ ஆதார் அட்டை;மம்தா பானர்ஜி

ஆதார் அட்டை திட்டத்தில் தனி நபர் அடையாளங்களை இணத்துள்ளது ஆபத்தானது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசின் உதவிகளை பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை திட்டத்தை பயன்படுத்தி நாட்டில் ஊடுரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ’அரசின் மானியங்கள் மற்றும் பிற உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டுக்குள் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளின் எவ்வளவு பேர் என்பதை மத்திய அரசினால் கண்டுபிடிக்க முடியுமா ?. ஒவ்வொரு தனி நபர் அடையாளங்களும் ஆதார் அட்டை திட்டத்தில் இணைக்கப்பட்டது சமூகத்திற்கும் தனி நபர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என அவர் விமர்சனம் செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top