திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர்.

தொடர்ந்து திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

இன்று காலை ம.தி.மு.க பொதுச்செயலாலர் வைகோ, தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன், நடிகர் ராதாரவி ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்; தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.

Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about the health of Kalaignar Karunanidhi Ji and offered any assistance required. I pray for his quick recovery and good health. @kalaignar89
— Narendra Modi (@narendramodi) July 27, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் கேட்டறிந்தார் .

Spoke to Thiru Karunanidhi’s family members on the phone and inquired about his health. Wishing the former Chief Minister of Tamil Nadu, a veteran of our public life, a quick recovery #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 27, 2018


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top