ராஜஸ்தானில் இஸ்லாமியர் ஒருவர் மாடு கடத்தியதாக கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்!


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில்,இந்துத்துவ வாதிகளால் மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு, ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்வாரில் இருக்கும் ராம்கர் கிராமத்தில் உள்ள இந்துத்துவ வாதிகள் சில பேர் பொது மக்கள் என்ற பெயரில் மாடுகளை ஓட்டிச் சென்றஅடையாளம் தெரியாத இரண்டு இஸ்லாமியர்களை பார்த்துள்ளனர்.

இதையடுத்து, இரண்டு இஸ்லாமியர்களும் மாட்டுகறிக்காக மாட்டை பிடித்துகொண்டு வந்தவர்கள் என்று புரளியை கிளப்பி விட்டனர் பிறகு கிராம மக்களோடு இந்துத்துவ வாதிகள் சேர்ந்து கொண்டு அவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அக்பர் கான் என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார்

4 நாட்களுக்கு முன்னர் தான் உச்ச நீதிமன்றம், ‘மாட்டை காப்பதற்காக என்று கூறிக் கொண்டு சட்டத்தை பொது மக்கள் கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் அதைப் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அரசு இது குறித்து கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இரும்புக் கரம் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண்டும் என்று கடுமையாக தெரிவித்தது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பசு காவலாளிகளை ஆதரித்துவிட்டு, .பசு காவலர்கள் என்ற பெயரில் பல கொலைகளை செய்ய தூண்டிவிட்டு இப்போது கைமீறி போனபின்பு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். சட்ட ஒழுங்கை மாநில அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் இதைப் போன்ற சம்பவம் பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top