8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- சேலத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் மாநகர போலீசில் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து இன்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 8 வழி சாலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top