சுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’

மத்திய பாஜக அரசின் வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும் டீசல் விலை, சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று 4,500 லாரிகள் ஓடவில்லை. நாளை முதல் காய்கறி வரத்தில் பாதிப்பு ஏற்படும்.

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று (20-ந் தேதி) முதல் நாடு தழுவிய லாரி ‘ஸ்டிரைக்’ போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசு இவர்களின் கோரிக்கையை வழக்கம்போல் கண்டும் காணாமலும் இருந்தது. அப்படி போராட்டம் நடந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மக்கள் மேல் அக்கறை கொள்ளவும் இல்லை.லாரி உரிமையாளர்களை பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை

ஆகையால்,அவர்கள் சொன்னபடி இன்று காலை 6 மணி முதல் லாரி ‘ஸ்டிரைக்’ தொடங்கியது. சென்னையில் மணல் லாரிகள், காய்கறி லாரிகள், பார்சல் லோடு லாரிகள் உள்ளிட்ட 4,500 லாரிகள் இன்று ஓடவில்லை. லாரி புக்கிங் பார்சல் சேவை நிறுத்தப்பட்டதால் சரக்குகள் தேங்கின.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு லாரிகள் இன்று அதிகாலைக்குள் வந்து சேர்ந்ததால் இன்று காய்கறி வரத்தில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல காய்கறி மார்க்கெட் செயல்பட்டது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி லோடு லாரிகள் நாளை முதல் கோயம்பேடுக்கு வராது. இதனால் காய்கறி வரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால் காய்கறி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. மேலும் காய்கறி தட்டுப்பாடும் உருவாகும்.

சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று (20-ந் தேதி) காலை 6 மணி முதல் லாரி ‘ஸ்டிரைக்’ தொடங்கி உள்ளது.

சென்னையில் மணல் லாரிகள், பார்சல் லோடு லாரிகள், காய்கறி லோடு லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. சென்னை மாவட்டத்தில் 4,500 லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. மாதவரத்தில் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து காய்கறி லாரிகள் அதிகாலைக்குள் சென்னைக்குள் வந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி தட்டுப்பாடு ஏதுவும்இல்லை. வழக்கம் போல கோயம்பேடு மார்க்கெட் இயங்கியது. மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் டேங்கர் லாரி, எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் டிரெய்லர் லாரிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் கியாஸ், பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு லாரி மூலம் எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்படும்.

கோயம்பேடு காய்கறி பழம் மற்றும் பூ மார்க்கெட்டிற்கு இன்று வழக்கம் போல் லாரிகளில் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது இதுகுறித்து கோயம்பேடு காய் கனி மலர் வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எங்களின் தார்மீக ஆதரவு உண்டு. கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமார் 500லாரிகளில் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது இன்று எந்தவித பாதிப்பும் இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு லாரிகளில் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top