மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல் சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பேசி வருகிறார்.

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தி.மு.க தார்மீக ஆதரவு அளித்து உள்ளது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது. எந்த பிரச்சினைக்கும் முதல்வர் முறையாக பதில் சொல்வது இல்லை.

தமிழகம் முழுவதும் நடக்கும் கொள்ளைக்கு ஆதாரம் உள்ளதை முதலமைச்சர் மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என முதல்வர் கூறியதற்கு ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த எந்த வருமான வரி சோதனைக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. கார்களிலேயே பணமும்,தங்கமும் தமிழகத்தை சுற்றிவரும் நிலை இருக்கிறது. அதற்கு அரசிடம் பதில் இல்லை. வருமானவரி சோதனை உள்நோக்கத்துடன் நடைபெறுகிறதா என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 8 வழிசாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்து பேசியதில் ஆச்சரியமில்லை.

வரும் 23 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top