நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு! மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதலுக்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தும் ஏபிவிபி, பஜ்ரங்தல் அமைப்பினரை கைது செய்ய மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். சுவாமி அக்னிவேஷை பாஜகவினர் சிலர் தாக்கியதை குறிப்பிட்டு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

மக்களவையில் அதிமுக எம்.பி. கோபால கிருஷ்ணன் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதில் அளிக்கும் போது மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்கிறது என கூறினார்.

நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களே காரணம் , இனி அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்ல தேவை இருக்காது என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top