வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-10 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் 10-அத்தியாயத்தில் ஆய்வாளரும் எழுத்தாளரும் பேராசிரியருமான ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் உரையாடுகிறார்கள்.

ஆ. சிவசுப்பிரமணியன் வ.உ.சி யின் ஊரான நெல்லைமாவட்டம் ஓட்டபிடாரத்தில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பொதுவுடைமைக்கொள்கையில் ஈடுபாடுகொண்டு பேராசிரியர் நா.வானுவாமலை அவர்கள் பாதையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் சிறந்த கட்டுரைகளை தமிழுக்கு தந்தவர். அடித்தள மக்களின் வரலாற்றை தம் எழுத்தில் பதிவு செய்தவர். இவர் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானிடவியல் போன்ற துறைகளில் இயங்கி வருபவர் .

கிராமங்களிலும் கடற்கரை பகுதியிலும் மக்களிடையே இருந்த வாய் மொழி வழக்காறுகளைத் தொகுத்து தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாக செயல்பட்டவர். குறிப்பாக கிறித்தவர், இஸ்லாமியர் நாட்டுப்புறவியல் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானது.

வ.உ.சி யின் பன்முகத்தன்மையை பல நூல் வாயிலாக வெளியிட்டு இருக்கிறார். ஆ.சிவசுப்பிரமணியன் ஒரு பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர். அவருடைய பல்வேறு ஆய்வுகளும் ஆக்கங்களும் களப்பணிகளும் தமிழுக்கு முக்கியமானவை.

இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார்.பற்றி நம்மோடு பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் உரையாடுகிறார். இதோ…

உரையாடலை காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்.

தமிழ்ஸ்நவ்

வீடியோ இணைப்பு;


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top