இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர்.

இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் எதிராக புத்தர் நடத்திய போராட்டங்கள், அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டதையும் தெரிவித்தார்.

புத்த நெறியை மதமாக மாற்றி, அதில் சடங்குகள் புகுத்திய பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் திசை மாறி இப்போது தாய்லாந்து, மியான்மர், இலங்கையில் எவ்வாறு மத வெறியாக உலா வருகிறது என்று ராகுல் கூறியதை இயக்குனர் ரஞ்சித் பதிவு செய்தார்.

பா.ஜ.க,இந்துத்துவவாதிகள் தலித் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், அவர்களின் சதியை உணர தவறியது ஏன் பிரித்தாலும் சூழ்ச்சி வலையில் இருந்து பாதுகாக்க வேண்டிய களப்பணி பற்றி உரையாடல் இருந்தது என்றும் கூறினார்.

இயக்குனர் ரஞ்சித் இறுதியாக பேரரிவாளன் விடுதலை பற்றி நேரடியான கேள்வியை கேட்டு இருந்ததை பதிவு செய்தார்.

அதற்கு, ராகுல் காந்தி “தனிப்பட்ட முறையில் அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன். சட்ட சிக்கலும், தன் தந்தையின் கொலையில் உள்ள ஆழ்ந்த சதிகளும் அவர் விடுதலைக்கு தடையாக இருப்பதாக உணர்கிறேன்” என்று ராகுல் கூறியதை பதிவு செய்தார்.

.நல்ல சூழல் வந்தால் அவர்களின் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டும் என்று இயக்குனர் ரஞ்சித் கோரிக்கை விடுத்து வந்ததையும் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top