மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல்

மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மலேசியா மணலை வைத்து இனி மதுரையில் வீடு கட்டலாம்.. இறக்குமதிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது

ஆறுகளில் மணல்களை அள்ள சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தது. இதையடுத்து ஆற்று மணலுக்கு பதிலாக மலேசிய மணலை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.

மலேசியாவில் இருந்து மணல் வாங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மலேசிய மணலை வாங்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. மலேசியாவிலிருந்து 54,000 டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளது. மணல் இறக்குமதி செய்த நிறுவனத்துடன் நாளை மறுநாள் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனம் மலோசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது. மணல் விலை குறித்து ஆலோசனை நடத்தி நிர்ணயிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top