அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது

பாஜக தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக ட்விட்டரில் பலர் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்

பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவை வலிமைப்படுத்தும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ளார். இன்று மாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி கடற்கரையில் அக்கட்சித்தொண்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக ட்விட்டரில் பலர் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இன்று காலை தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரசாரம் பிற்பகல் இரண்டு மணியளவில் சுமார் 1.20 லட்சம் ட்வீட்டுகள் உடன் இந்திய அளவிலான இன்றைய ‘டாப் டிரெண்ட்’ ஆக பரவி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top