தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட்

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தாஜ்மஹால் மஸ்ஜித் மேலாண்மைக் குழுவின் தலைவர் சையத் இப்ராஹிம் ஹுசைன் சைதி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளதாக நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top