புதிய கல்வி கொள்கைக்கான வரைவு: கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தற்போதைய கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் கடந்த 1992-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு புதிய கல்வி கொள்கையை வரைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவி வகித்தபோது, புதிய கல்வி கொள்கையை வரைவு செய்திட டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கடந்த 2016-ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

இதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை வரைவு தயாரிப்பது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 8 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30-ம் தேதி கஸ்தூரிரங்கன் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்நிலையில் அந்த கமிட்டிக்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top