காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு!சிறுமி மரணம்! இணையதள சேவை முடக்கம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சொல்லி இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.தேவையில்லாமல் கிராமத்தில் சோதனை நடத்த வேண்டாம்.குறிப்பாக தனியாக இருக்கும் பெண்கள் வீட்டில் உள்ளே புகுந்து அத்துமீறலை நடத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.அதையும் மீறி இந்திய பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டதால் இந்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.. இதைத்தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல், போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நடந்தது போன்று போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இராணுவத்தின் இந்த அயோக்கியத்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காஷ்மீரின் அப்பாவி இளைஞர்கள் Ahmed Khanday (22), Irshad Majeed (20) மற்றும் Andleeb (16) வயது சிறுமியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளார், பல்வேறு மக்கள் கடுமையான காயம் பட்டுள்ளனர்.

மூன்று பேரின் இறுதி ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்து கொண்டு இந்தியத்தின் இனப்படுகொலையை கண்டித்தும், காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

காஸ்மீர் விடுதலை போராளி புர்ஹான் வானியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற ஜீலை 8 ஆம் தேதி வருகிறது, இதனை தொடர்ந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பந்திப்பூரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் அங்கு பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மற்ற பகுதிகளிலும் பல மனித உரிமை அமைப்புகளுக்கும் தகவல் பரவுவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர், குப்வாரா, பண்டிபோரா, பாரமுல்லா மற்றும் பட்காம் போன்ற பல பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இணையதள முடக்கத்தால் மாணவர்கள், வல்லுநர்கள், மருத்துவர்கள், ஊடக நபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top