உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி.

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று முடிவில் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன. 8 அணிகள் கால்இறுதி சுற்றில் எஞ்சி நிற்கின்றன. இதுவரை நடந்துள்ள 56 ஆட்டங்களில் 146 கோல்கள் பதிவாகியுள்ளன. இதில் பரபரப்பான கடைசி 10 நிமிடங்களில் மட்டும் 31 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சாதனை எண்ணிக்கையாக இந்த தொடரில் மொத்தம் 28 பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் 21 கோலாகமாறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில்இரண்டு கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன இதில் ஒரு கால்இறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பிரான்சும், உருகுவேயும் கோதாவில் குதித்தன. சற்று மந்தமாக ஆட்டம் நடந்து வந்த நிலையில், 40வது நிமிடத்தில் வரானே கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது.

உருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் கடைசியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.

இந்தநிலையில், ஆட்டத்தின் இறுதியில், உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top