சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடைகேட்ட மனு முதன்மை அமர்வுக்கு பட்டியலிடப்பட்டது

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து மனுவை முதன்மை அமர்வுக்கு அனுப்பியது

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. இடைக்கால தடைவிதிக்க கோரிய கோரிக்கை நிராகரிக்கபட்டது.

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக அமையவுள்ளது. சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க அரசு எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிகாரிகள் போலீஸ் துணையோடு விவசாயிகளின் நிலங்களில் புகுந்து அளவிடுகிறார்கள் இதை எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவிக்க முயற்சி எடுக்கவில்லை நிலத்தை அளவீடு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த பி.வி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் சேலம் – சென்னை 8 வழிசாலைக்கு சுற்று சூழல் ஆய்வு நடத்தாமல் நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். தருமபுரியில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த வருவாய் அதிகாரிக்கு பிறப்பித்த உத்தரவை தடை செய்ய கோரி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கல்யாணசுந்தரம், முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி “இந்த உத்தரவுக்கு 8 வழிச்சாலை தொடர்பாக அரசு அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது. அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கும் முரணானது. எனவே அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், “இதுதொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் முதன்மை அமர்வில் நிலுவையில் உள்ளது. ஆகவே தடை விதிக்க கூடாது. பொதுமக்களிடம் உரிய கருத்துகளை கேட்டுத்தான் நில ஆர்ஜிதம் நடந்தது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, நில ஆர்ஜிதம் என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது என்பதால் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கை இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top