ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது மத்திய-மாநில அரசுகள் -மு.க.ஸ்டாலின்

 

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் செயல்படுகின்றன என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்த ஆர்ப்பட்டத்தை  தொடங்கி வைத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பின்னர் பேசியதாவது:-

 

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதியில்லை. மக்கள் பிரச்சினைகளை  பேசவும்  சட்டசபையில் அனுமதி இல்லை.

 

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன என கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top