தோழர் முகிலன் பாளை சிறையிலிருந்து மதுரைக்கு மாற்றம்; கொசுக்கடிக்கும் தனிமை சிறையில் அடைப்பு

 

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளுக்காக தோழர் முகிலனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 291 நாட்களாகிறது.

 

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட  இடிந்தகரை மக்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் போட்டு எளிய மக்களை கோர்ட்டுக்கு அலைகழிக்கும் அரசை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் முகிலன். நீண்ட நாட்களாகியும் உண்ணாவிரதத்தை முடிக்காததால்,இந்த அரசும் சுப்ரீம் கோர்ட் சொல்லியும் வழக்குகளை வாபஸ் வாங்காததால்  .அரசியல் கட்சி தலைவர்கள்,இயக்க தலைவர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார்.

 

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் 29-09-2016 அன்று மணல் குவாரிகளை ரத்து செய்யக்கோரி சட்டவிரோதமாக ஒன்று கூடி அரசு உத்தரவை மீறி ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருந்ததாக போடப்பட்ட வழக்கில் அவர் கரூர் நீதிமன்றத்தில்) ஆஜர் படுத்தப்பட்ட அதே நேரத்தில் முகிலன் மீது அரவக்குறிச்சியில் பாரதிதாசன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் நியூட்ரினோ – அணு உலை -ஸ்டெர்லைட் – கெயில் – ஹைட்ரோகார்பன் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்து பேசியதற்காக தேசதுரோக வழக்கு பதியப்பட்டு மீண்டும் தேசத் துரோக கைதியாக பாளை சிறையில் அடைக்கப்பட்டார்

 

இத்தகைய அடக்குமுறைகளுக்கெல்லாம் துளியும் அஞ்சாமல் நெஞ்சுரத்துடன் போராடிய தோழர் முகிலன் இப்போது மதுரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்

 

ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பாளை சிறையிலிருந்து மதுரைக்கு மாற்றி அங்கு மலம் தேங்கியிருக்கும் செப்டிக் டேங்க் அருகில், தாங்கவியலா கொசுக்கடியில் அதுவும் தனிமை சிறையில் அடைத்து வைத்து இருக்கிறது தமிழக அரசு. முகிலனை சீக்கிரம் வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top