உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது.

,

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சில ஜாம்பவான் அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் இன்று எதிர்கொண்டது.

பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.

 

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் 51வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய மெக்சிகோ அணியினர் கடுமையாக முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரோபர்டோ 1 கோல் அடிக்க பிரேசில் அணி 2-0 என முன்னிலை வகித்தது. மெக்சிகோ அணியால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் . இதன்மூலம் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top