மக்கள் நிம்மதியாக வாழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் விஜயகலா

 

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், அதிபரின் மக்கள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர்கள் வஜிர அபயவர்த்தன, திலக் மாரப்பணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசியதாவது:-

 

தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்?  தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.

 

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்” இவ்வாறு விஜயகலா பேசினார். இந்தப் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top