தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 75 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி போலீஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 75 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்காமல் நீதிபதி சொந்த ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்தார்.

 

இதை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘75 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் போலீஸார் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் 75 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது. போலீஸாரி்ன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top